• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சனாதிபதி நிதியம் தொடர்பிலான கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கை - 2018
- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(3) ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளுடன் வாசிக்கப்பட வேண்டிய 1978 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க சனாதிபதி நிதிய சட்டத்தின் 9(2) ஆம் பிரிவுக்கு அமைவாக 2018 திசெம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டிற்குரியதாக சனாதிபதி நிதியம் கணக்காய்வாளர் அதிபதியினால் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த நிதிய சட்டத்தின் 10 ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் 2018 நிதியாண்டிற்கான கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.