• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையைத் திருத்து
- விவாக வழக்குகளுக்குரிய நடவடிக்கைமுறை தொடர்பிலான சில ஏற்பாடுகள் குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையில் உள்வாங்கப்பட்டுள்ளது இவற்றுள் சில ஏற்பாடுகள் காலம் கடந்துள்ளமையினால் நடைமுறைக்கு ஏற்றதல்ல எனவும் இதன் காரணமாக வழக்கு நடவடிக்கைகளின் போது தாமதம் ஏற்படுகின்றதெனவும் தெரியவந்துள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையைத் திருத்தும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது