• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சைகை மொழி சட்டமூலமொன்றைத் தயாரித்தல்
- சைகை மொழி அங்கீகரிக்கப்பட்ட மொழியொன்றாக ஏற்றுக்கொள்வதற்கு 2010 செப்ரெம்பர் மாதம் 08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் கணிசமான செவிப்புலன் குறைபாடுடையோர் இருக்கின்றமையினால் அவர்களுடைய கல்வித் தேவைகள், சட்ட பணிகள், சுகாதார வசதிகள், பல்வேறுபட்ட அரசாங்க சேவைகள் மற்றும் தனியார் சேவைகள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளும் போது சைகை மொழி ஏற்றுக் கொள்ளப்பட்ட தொடர்பாடல் மொழி மூலமொன்றாக அங்கீகரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் மூலம் செவிப்புலன் குறைபாடுடையோர் பலப்படுத்தப்படுகின்றனர். ஆதலால் இலங்கையில் சைகை மொழியை அங்கீகரிக்கப்பட்ட மொழியொன்றாக தாபிக்கப்படுவதற்கு சட்டமூலமொன்று தயாரிக்கப்படவேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சைகை மொழியை முறையான தொடர்பாடல் மொழிமூலமொன்றாக ஏற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் இதன் பொருட்டு சட்டமூலமொன்றை வரைவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.