• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதி கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டம், 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க வௌ்ளைப் பணமாக்கல் தடைச்சட்டம் மற்றும் 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை தடுக்கும் சமவாயச் சட்டம் என்பவற்றைத் திருத்துதல்
– நிதி செயலணியின் சிபாரிசுகளுக்கு அமைவாகவும் வௌ்ளைப் பணமாக்கலை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதைத் தடுத்தல் தொடர்பிலான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவினாலும் அங்கீகரிக்கப்பட்டதும் சட்ட மீளாய்வுக் குழு மற்றும் வௌ்ளைப் பணமாக்கல் பற்றிய ஆசிய பசுபிக் வலய குழுவினால் இனங்காணப்பட்டுள்ளதுமான குறைபாடுகளை தழுவும் விதத்தில் நிதி கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டத்திற்கு திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக 2010 மே மாதம் 05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க உரிய சட்டங்களை வரையும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதோடு, அதன் பின்னர் 2014 / /2015 ஆம் ஆண்டினுள் ஆசிய பசுபிக் வலய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பரஸ்பர மதிப்பீட்டின் போது இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட திருத்தங்களுக்கு மேலதிகமாக செய்யப்படவேண்டிய சில திருத்தங்கள் இனங்காணப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைநர் திணைக்களம், நிதி புலனாய்வு பிரிவு உட்பட உரிய நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட வரைவானது 2017 மார்ச் மாதத்தில் சர்வதேச நிதி நிதியத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்பு குழுவினாலும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இனங்காணப்பட்டுள்ள பிரச்சினைகளை தழுவும் விதத்தில் பின்வரும் சட்டங்களை திருத்துவதற்கும் இதன் பொருட்டு சட்டமூலங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதி கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டம்.

* 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க வௌ்ளைப் பணமாக்கல் தடைச்சட்டம்.

* 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை தடுக்கும் சமவாயச் சட்டம்.