• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தற்கால தேவைகளுக்கு ஏற்றவிதத்தில் சட்டங்களைத் திருத்துதல்
– பின்வரும் சட்டங்களை திருத்துவதற்காக அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகள் சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுகளைப் பெற்றுக் கொள்வதற்காக தொடர்புபடுத்தப்பட்டது. இதற்கிணங்க இந்த உபகுழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த சட்டங்களைத் திருத்துவதற்கான சட்டமூலங்களை தயாரிப்பதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.

* குடிவரவு, குடியகல்வு சட்டம் (தற்போது நடைமுறையிலுள்ள 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு, குடியகல்வு சட்டம் மற்றும் அதற்குரிய திருத்தங்களை நீக்கி புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்.).

* 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரை தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் 2011 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, மாகாண சபைகள் (முத்திரைத் தீர்வையை கைமாற்றுதல்) சட்டம்.

* 2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பள தேசிய சட்டம்.

* 1999 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க சமுதாயஞ்சார் சீர்திருத்த சட்டம்.

* தண்டனை சட்டக்கோவையின் 53 ஆம் பிரிவு (பருவமடையாதவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்குரியதான ஏற்பாடுகள்).