• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமுத்திர பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை வடிவமைத்தல் மற்றும் கையளித்தல் M/s CINEC Campus (Pvt.) Limited., நிறுவனம், இலங்கை துறைமுக அதிகார சபையின் மஹபொல துறைமுகம், சமுத்திர கல்லூரி மற்றும் இலங்கை துறைமுக முகாமைத்துவ ஆலோசனை சேவை கம்பனி என்பவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பு
- துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை என்பவற்றின் அபிவிருத்தி மற்றும் விரைவான வளர்ச்சி காரணமாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை சார்பில் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய உயர் தேர்ச்சியுடன்கூடிய கட்டுக்கோப்பான ஊழியர் படையொன்று இருத்தல் வேண்டும். இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழுள்ள மஹபொல துறைமுகம், சமுத்திர கல்லூரி தற்போது இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. துறைமுக சேவை சார்ந்த மற்றும் பிற சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இலங்கை துறைமுக அதிகார சபை, இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம், M/s. Colombo Dockyard PLC நிறுவனம், இலங்கை கப்பல் முகவர் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட சிலோன் சிப்பின் லைன்ஸ் கம்பனி போன்ற நிறுவனங்களின் பங்களிப்புடன் வரையறுக்கப்பட்ட இலங்கை துறைமுக முகாமைத்துவ ஆலோசனை சேவை கம்பனி தாபிக்கப்பட்டுள்ளது.

M/s CINEC Campus (Pvt.) Limited., நிறுவனம், சமுத்திர பயிற்சி நிறுவனமொன்றாக நாட்டில் செயற்படும் மற்றுமொரு நிறுவனமாகும்.

நாட்டில் கப்பற்துறை சார்ந்த தொழிலை மேம்படுத்துதல், பாடநெறிகளுக்காக உள்வாங்கப்படும் பயிலுநர்களுக்கு நிதி வசதிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் வௌிநாடுகளில் இலங்கை மாலுமிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபை, மஹபொல துறைமுகம் மற்றும் சமுத்திர கல்லூரி, இலங்கை துறைமுக முகாமைத்துவ ஆலோசனை சேவை கம்பனி மற்றும் M/s CINEC Campus (Pvt.) Limited., நிறுவனம் என்பவற்றுக்கிடையில் அறிவு மற்றும் வளங்களை பரிமாறிக் கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த நோக்கத்திற்காக

M/s CINEC Campus (Pvt.) Limited., நிறுவனத்துடன் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு அதிகாரத்தினை கையளிக்கும் பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.