• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 தொற்று நிலைமையினால் பாதிக்கப்பட்ட மின்சார நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குதல்
- COVID - 19 தொற்று நிலைமைக்காரணமாக பாதிப்புக்கு ஆளாகியுள்ள மின்சார நுகர்வோருக்கு சலுகைகளை வழங்குவதற்கு உரியதான மின்சக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரிப்புகள் மற்றும் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மின்சார பட்டியல்கள் மற்றும் நீர் பட்டியல்கள் என்பவற்றை செலுத்துவதற்கு சலுகை வழங்குவதற்குரியதாக சுற்றுலாத்துறை அமைச்சரினால் வழங்கப்பட்ட பிரேரிப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பின்வருமாறு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள வீட்டு, வர்த்தக மற்றும் கைத்தொழில் மின்சார பாவனையாளர்களுக்கு இந்த காலப்பகுதிக்குரியதாக மின்சார பட்டியல்களை தீர்வு செய்வதற்கு பட்டியல் திகதியிலிருந்து 06 மாதங்களைக் கொண்ட சலுகை காலத்தினை வழங்குவதற்கும் அதுவரை மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் இருப்பதற்கும்.

* தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள திரையரங்குகளில் 2020 மார்ச் மாதத்திலிருந்து திசெம்பர் மாதம் வரையிலான மின்சார பட்டியல்களை, பட்டியல் திகதியிலிருந்து சமமான 12 தவணைகளில் தீர்ப்பதற்கு வாய்ப்பு வழங்குவதற்கும் அதுவரை மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் இருப்பதற்கும்.

* இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்ட தங்குமிடங்களுக்குரியதாக 2020 மார்ச் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 2021 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிவரையிலான மின்சார பட்டியல்கள் மற்றும் நீர் பட்டியல்களை சமமான 12 தவணைகளில் தீர்ப்பதற்கு வாய்ப்பு வழங்குவதற்கும் அதுவரை உரிய விநியோகங்களைத் துண்டிக்காமல் இருப்பதற்கும்.