• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய பசுபிக் வர்த்தக உடன்படிக்கையின் கீழ் மொங்கோலியாவுக்கு வரிச்சலுகை வழங்குதல்
– இலங்கையும் உறுப்பு நாடாகவுள்ள ஆசிய பசுபிக் வர்த்தக உடன்படிக்கையின் தரப்பொன்றாக மொங்கோலியா 2020 செப்ரெம்பர் மாதம் 29 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளது. இதற்கிணங்க உறுப்பு நாடொன்றாக இலங்கை பரஸ்பரம் மொங்கோலியாவுடன் வரிச்சலுகை பரிமாறல்களை செய்துகொள்ளவேண்டியுள்ளது. இந்த வர்த்தக உடன்படிக்கையின் பங்குதாரர்களான பங்களாதேஷ், லாவோஸ் போன்ற நாடுகள் சார்பில் இலங்கை ஏற்கனவே வழங்கியுள்ள வரிச்சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு குறித்த உடன்படிக்கையின் கீழ் மொங்கோலியாவும் தகைமை பெறுகின்றது. இதற்கிணங்க, குறித்த வரிச்சலுகையினை வழங்குவதற்கும் இரு தரப்புக்கும் இடையில் மேலும் பரஸ்பரம் உடன்படக்கூடிய வரிச்சலுகைகளை இனங்காண்பதற்கு அந்நாட்டுடன் கலந்துரையாடுவதற்குமாக வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.