• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெளிநாட்டு அமைச்சின் விடயநோக்கெல்லையின் கீழ் சர்வதேச ஒத்துழைப்புக்காக ஒதுக்கப்பட்ட பிரிவொன்றைத் தாபித்தல்
- ஆசியாவை மையப்படுத்தி வளர்ச்சிகண்டுவரும் பொருளாதார பின்னணிக்கு அமைவாக உலகளாவிய பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் மாற்றமடைந்துவரும் சந்தர்ப்பத்தில் பலம்மிக்க பொருளாதார இராஜதந்திர அணுகுமுறையொன்றின் பொருட்டு பிரதான பொருளாதார நிறுவனங்கள் அனைத்தினதும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக பொருளாதார இராஜதந்திர ரீதியிலான கொள்கையினை வகுப்பதற்காகவே ஒதுக்கப்பட்ட பிரவொன்றை வெளிநாட்டு அமைச்சில் தாபிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க உரிய துறைசார் நிபுணர்களைக் கொண்ட சர்வதேச ஒத்துழைப்புக்கான விசேட பிரிவொன்றைத் தாபிக்கும் பொருட்டு வெளிநாட்டு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.