• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இத்தாபான - ஹொரவல - தொட்டுபொல வீதியின் இத்தாபான பிரதேசத்தில் பெந்தர ஆற்றுக்கு குறுக்காக பாலமொன்றை நிர்மாணித்த
- இத்தாபான - ஹொரவல - தொட்டுபொல வீதியின் இத்தாபான பிரதேசத்தில் பெந்தர ஆற்றுக்கு குறுக்காக புதிய பாலமொன்றையும் அதன் புகு வழியையும் நிர்மாணிப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. உத்தேச பாலத்தின் நீளம் சுமார் 160 மீற்றர்கள் ஆவதோடு வீதியின் மொத்த அகலம் 10.4 மீற்றர்களாகும். இதற்கிணங்க இந்த பாலத்தை "100,000 கிலோமீற்றர் வீதி விருத்திசெய்யும் கருத்திட்டத்தின்" கீழ் நிர்மாணிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.