• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச சந்தையுடன் இலங்கை கிராமங்களை இணைத்தல் என்னும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
– நாட்டில் பொதுமக்களை மையப்படுத்திய பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு உள்ளூர் கைத்தொழிலாளர்களுக்கும் சர்வதேச சந்தைக்கும் இடையில் பொருத்தமான வலையமைப்பொன்றை அபிவிருத்தி செய்தல் "சர்வதேச சந்தையுடன் இலங்கை கிராமங்களை இணைத்தல் என்னும் கருத்திட்டத்தின்" நோக்கமாகும் சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வணிக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் "பொருளாதார பலப்படுத்தல் மற்றும் கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - 2020” நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, "சமுர்த்தி உற்பத்திகள் மாதிரி கிராமம்" இதன் பிரதான துணை நிகழ்ச்சித்திட்டங்களில் ஒன்றாகும். இந்த துணை நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமும் கிராமிய மக்களின் தரமிக்க உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்வதற்கு எண்ணும் உள்நாட்டு கைத்தொலிளார்களை இனங்காண்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, நாட்டின் சகல மாவட்டங்களையும் தழுவும் விதத்தில் பொறிமுறையொன்றினை கட்டியெழுப்பக்கூடிய நிறுவன ரீதியிலான வலையமைப்பொன்றின் மூலம் சர்வதேச சந்தையுடன் இலங்கை கிராமங்களை இணைத்தல் என்னும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வணிக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுடன் பிராந்திய ஒத்துழைப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துகொள்வது சம்பந்தமாக வெளிநாட்டு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.