• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
40 மில்லி கிராம் Tenecteplase ஊசி மருந்து புட்டிகள் 17,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
– மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் இந்த ஊசி மருந்தினை கொள்வனவு செய்வதற்காக சர்வதேச ரீதியில் போட்டிக் கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மொத்த செலவான 7.82 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு இந்தியாவின் M/s Boehringer Ingelheim India (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது