• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Human Albumin Solution BP / Ph Eur 20% கொண்ட 50 ML புட்டிகள் 300,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினை கொள்வனவு செய்வதற்காக சர்வதேச ரீதியில் போட்டிக் கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு Human Albumin Solution BP / Ph Eur 20% கொண்ட 50 ML புட்டிகள் 300,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை மொத்த செலவான 6.27 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு இந்தியாவின் M/s Reliance Life Science (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.