• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடிநீரிலுள்ள நச்சு இரசாயனங்களை இல்லாதொழிக்கும் ஆராய்ச்சி கருத்திட்டமொன்றிற்காக உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ள
- ஐக்கிய இராச்சியத்தின் உயிரியல் தொழிநுட்ப மற்றும் உயிரியல் விஞ்ஞான ஆராய்ச்சி கவுன்சிலின் மூலம் நிதியுதவி வழங்கப்படும் ஆராய்ச்சி கருத்திட்டத்திற்குரியதாக ஐக்கிய இராச்சியத்தின் Robert Gordon பல்கலைக்கழகமும் பேராதனை பல்கலைக்கழகமும் ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகமும் இணைந்து உடன்படிக்கையொன்றை செய்துகொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. உத்தேச கருத்திட்டத்தின் மூலம் இலங்கையில் அதிகரித்துவரும் சிறுநீரக நோய்க்கு காரணமாக அமைந்துள்ளதென கருதப்படும் குடிநீர் மூலவளங்கள் மாசடைவதனால் பெருகியுள்ள நீல – பச்சை பாசிவகை வௌியிடும் அதிக நச்சுத் தன்மையான Cyanotoxin என்னும் இரசாயனத்தினை இல்லாதொழிப்பதற்கு இயற்கை உயிரியல் பொருட்களை பயன்படுத்தி செய்யக்கூடிய செலவு குறைந்த சுகாதார ரீதியில் பாதுகாப்பான உயிரியல் தீர்வொன்றினை கண்டறிவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இநத கருத்திட்டத்திற்கு ஐக்கிய இராச்சியத்தின் உயிரியல் தொழிநுட்ப மற்றும் உயிரியல் விஞ்ஞான ஆராய்ச்சி கவுன்சிலானது 03 மில்லியன் ஐக்கிய இராச்சிய பவுன்களை வழங்குவதற்கு உத்தேசித்துள்ளது. இதற்கிணங்க இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய இராச்சியத்தின் Robert Gordon பல்கலைக்கழகமும் பேராதனை பல்கலைக்கழகமும் ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகமும் இணைந்து உரிய உடன்படிக்கையினை செய்துகொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.