• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மின்சார சபையின் விக்டோரியா மின் நிலையத்தின் 01 ஆம் 02 ஆம் அலகு இயந்திரங்களில் இரண்டு உற்பத்தி ஸ்டேட்டர்களை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல், பரிசோதித்தல், பொருத்துதல் என்பவற்றினை மேற்பார்வை செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்து
– 700 மெகாவொட் வீதம் 03 அலகுகளைக் கொண்ட விக்டோரியா மின் நிலையம் 1984 ஆம் ஆண்டில் 210 மெகாவொட் ஆற்றலுடன் செயற்படுத்தப்பட்டது. எதிர்வரும் 30 வருட காலத்திற்கு இந்த மின்நிலையத்தின் இலகுவான செயற்பாட்டினை உறுதிசெய்யும் பொருட்டு செய்யப்படவேண்டிய திருத்த வேலைகள் பற்றி ஆராய்வதற்கு தொழிநுட்ப குழுவொன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவினால் மின்நிலையத்தின் 01 ஆம் 02 ஆம் அலகு இயந்திரங்களில் இரண்டு உற்பத்தி ஸ்டேட்டர்களை பொருத்துவதற்கு சிபாரிசு செய்துள்ளது. இதற்கிணங்க இந்த நோக்கத்திற்காக கொள்வனவு செயற்பாட்டினை பின்பற்றி பொருத்தமான நிறுவனமொன்றை தெரிவுசெய்யும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.