• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்து சபைக்காக கீழ் தளம் கொண்ட புதிய 200 பேருந்துகளை கொள்வனவு செய்தல்
– கொழும்பு மற்றும் அதற்கு அண்மித்த நகரங்கள் சார்ந்து நவீன வசதிகளுடன்கூடிய பொது போக்குவரத்து சேவையையும் வாகனங்களை நிறுத்திவைத்துவிட்டு செல்லக்கூடிய வசதியினையும் ஆரம்பிப்பதற்கு வாகன ஒழுங்குறுத்துகை, பேருந்து போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு தற்போதுள்ள பேருந்துகளைவிட பயணிகளுக்கான வசதிகளுடன்கூடிய குறுகிய தூரம் செல்வதற்கு ஏற்ற 200 பேருந்துகளை கொள்வனவு செய்யும் தேவையானது இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்ளூர் கம்பனிகளிடமிருந்து மட்டுப்படுத்தப்பட்டு போட்டி கேள்வி நடவடிக்கைமுறையினை பின்பற்றி கீழ் தளம் கொண்ட புதிய 200 பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கும் இதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டும் போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.