• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடும்ப சட்டங்கள் சட்டம்
– திருமணம், விவாகரத்து, பிரிதல் மற்றும் இவை சம்பந்தமான நடவடிக்கைமுறை 1907 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க விவாக பதிவு கட்டளைச் சட்டத்திலும் குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை தற்காலத்திற்கு ஏற்ற விதத்தில் திருத்தும் தேவை இனங்காணப் பட்டுள்ளது. இதற்கிணங்க குடும்ப சட்டங்கள் தொடர்பில் ஏனைய நாடுகளில் அமுலிலுள்ள சட்ட நிலமைகள் சம்பந்தமாக இந்த விடயம் தொடர்வில் நிபுணத்துவ அறிவுடைய குழுவொன்றின் ஊடாக ஆராய்ந்து விவாகரத்து, திருமணம் செல்லுபடியாகாத நிலை, பிரிதல், ஜீவனாம்சம், பிள்ளைகளின் பொறுப்பு மற்றும் சொத்துக்களை பகிர்தல் போன்ற சகல துறைகளுக்குமாக விரிவான குடும்ப சட்டமொன்றை வரைவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.