• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழிலை முடிவுறுத் துதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நட்டஈடு செலுத்தும் சூத்திரத்திரத்திற்கு அமைவாக கணக்கிடப்படும் ஆகக்கூடிய நட்டஈட்டு எல்லையைத் திருத்துதல்
– 2003 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டுள்ள 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழிலை முடிவுறுத்துதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் தொழிலாளர்களின் தொழிலை முடிவுறுத்தும் போது நிவாரணங்களை வழங்கும் நோக்கில் ஆக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தொழிலாளர்களின் சேவை முடிவுறுத்தப்படும் போது அவர்களுக்கு செலுத்த வேண்டிய நட்டஈட்டினை தீர்மானிப்பதற்கு சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க ​தொழில் அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அடிப்படையாகக் கொண்டு தொழிலார்கள் சேவையாற்றிய காலப்பகுதியினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு நட்டஈட்டு தொகையானது தீர்மானிக்கப்படும். ஆயினும் இந்த சூத்திரத்திற்கு அமைவாக கணக்கிடப்படும் நட்டஈட்டு தொகையானது 1,250,000/- ரூபாவைவிட விஞ்சுதல் ஆகாதென ஏற்பாடொன்று குறித்த ஒழுங்குவிதியில் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் நியாயமற்ற முறையில் தொழிலாளர்களை சேவையிலிருந்து நீக்கும் போதும் நிறுவனங்கள் மூடப்படுவதன் காரணமாகவும் தொழிலை இழக்கும் உயர் மாதாந்த சம்பளத்தை பெறும் ஊழியர்களுக்கு உரியதாகும் நட்டஈட்டு தொகையானது குறைந்த மட்டத்தில் நிலவுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, செலுத்தக் கூடிய உச்ச நட்டஈட்டு எல்லையை 1,250,000/- ரூபாவிலிருந்து 2,500,000/- ரூபா வரை அதிகரிக்கும் பொருட்டு ​தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.