• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீனாவில் இணைய வழியூடாக அல்லது இணைய வழியற்ற தளத்தின் ஊடாக தூய இலங்கை தேயிலையினை விற்பனை செய்தல்
– பிரதானமாக தேயிலை இறக்குமதி, ஏற்றுமதி அப்புறப்படுத்தலின் போது இணைய வழியூடாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள Benny Tea Company Limited நிறுவனத்தின் துணை கம்பனியொன்றான சீனாவின் பூஜீயான் மாகாணத்தின் Fujian Star china International Trade Company Limited நிறுவனத்தித்திற்கும் இலங்கை தேயிலை சபைக்கும் இடையில் சீனாவில் இணைய வழியூடாக அல்லது இணைய வழியற்ற தளத்தின் ஊடாக தூய இலங்கை தேயிலையினை விற்பனை செய்வதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத் திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இலங்கை தேயிலையை சீனாவில் மரபு ரீதியில் விநியோகிப்பதற்கு மேலதிகமாக இலங்கை தேயிலையின் வர்த்தக பெயரை இணைய வழியூடாக மேம்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்குமாக சீனாவில் களஞ்சியப்படுத்துதல் மற்றும் கையளித்தல் வலையமைப்புக்கு ஒத்தாசை நல்கும் விதத்தில் 5G இணைய வழி விற்பனை தளமொன்றினை தாபிப்பதற்கு இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் குறித்த நிறுவனமானது உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க சீன தேயிலை சந்தையில் நிலவும் வாய்ப்பினை பயன்படுத்தி இணைய வழியூடாக அல்லது இணைய வழியற்ற தளத்தின் ஊடாக தூய இலங்கை தேயிலையினை விற்பனை செய்வதற்கு இலங்கை தேயிலை சபைக்கும் சீனாவின் Star China International Trade Company Ltd., நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.