• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேங்காய் உட்பகுதி சார்ந்த கைத்தொழிலுக்காக பயன்படுத்துவதற்கு குளிரூட்டப்பட்ட தேங்காய் உட்பகுதிகளை இறக்குமதி செய்த
- தேங்காய் உட்பகுதி சார்ந்த கைத்தொழிலுக்கு உள்ளூர் தேங்காய் உற்பத்தியானது போதுமானதாக இல்லாததன் காரணமாக சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தேங்காய் உட்பகுதிகளை இறக்குமதி செய்வதற்கு 2017 திசெம்பர் மாதம் 12 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க 08 மாத காலப்பகுதிக்குள் 2,542 மெற்றிக்தொன் தேங்காய் உட்பகுதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சுமார் 250 மில்லியன் தேங்காய் பற்றாக்குறை நிலவக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால் தொடர்ச்சியாக நான்கு (04) மாத காலப்பகுதிக்குள் இரண்டு (02) மாதங்களுக்கான தேங்காய் உற்பத்தி 400 மில்லியன் தேங்காய்களைவிட குறைவாகவிருந்தால் இதற்கு முன்னைய சந்தர்ப்பத்தில் ஏற்புடைத்தாக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் உள்நாட்டு தேங்காய் உட்பகுதி சார்ந்த கைத்தொழிலுக்காக தேங்காய் உட்பகுதிகளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு சம்பந்தமாக அமைச்சரவையின் உடன்பாட்டினை தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.