• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் வாகனங்களை உற்பத்தி செய்தல், பொருத்துதல் மற்றும் வாகன உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்தல் தொடர்பிலான தரக் கையாள்கை நடவடிக்கைமுறை
– உலகில் துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் மோட்டார் வாகன கைத்தொழிலை இலங்கையில் அபிவிருத்தி செய்வதற்கு உயர் வாய்ப்பு நிலவுகின்றதோடு, அதன் பொருட்டு தற்போது நடைமுறையிலுள்ள ஒழுங்குவிதிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பில் தௌிவான வழிகாட்டலொன்றின் தேவை எழுந்துள்ளது. இதற்கிணங்க மோட்டார் வாகன கைத்தொழிலுக்குரிய நடவடிக்கை முறை தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து அரசாங்க நிறுவனங்கள் மற்றும் கைத்தொழிலாளர்களின் உடன்பாடு அதேபோன்று நிபுணர்களின் ஒத்துழைப்புடன் உள்நாட்டு பெறுமதி சேர்க்கும் சூத்திரம் மற்றும் கரு. உள்ளடக்கப்பட்ட உத்தேச தரக் கையாள்கை நடவடிக்கை முறையானது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தரக் கையாள்கை நடவடிக்கை முறையிலுள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.