• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வௌிப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்திலுள்ள எற்பாடுகளின் கீழ் பாதணிகளை இறக்குமதி செய்வதற்கான செஸ் வரியினை திருத்துவதற்கு 2020 ஒக்றோபர் மாதம் 28 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலானது வௌியிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்த வர்த்தமானி அறிவித்தலின் கீழான ஏற்பாடுகளை மேலும் திருத்துவதற்கும் மேலும் சில பொருட்களுக்கான செஸ் வரியினை திருத்துவதற்குமாக 2020 ஒக்றோபர் மாதம் 29 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலானது வௌியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.