• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் ஆரம்ப சுகாதார சிகிச்சை சேவை வழங்கும் ஒருங்கிணைந்த பொறிமுறையில் உயர் இரத்த அழுத்த தடுப்பு மற்றும் முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான பன்முக மூலோபாயம் என்னும் ஆராய்ச்சி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
– நாளொன்றுக்கு சிபாரிசு செய்யப்பட்ட அளவினைவிட உணவிற்காக எடுத்துக் கொள்ளப்படும் உப்பு, உயர் இரத்த அழுத்தம் உட்பட இருதய நோய் என்பவற்றுக்கு காரணமாகும். ஆரம்ப சுகாதார சிகிச்சை சேவைகளை வழங்கும் போது இருதய நோயினை கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்தல் சார்பில் தற்போது இலங்கை WHO-PEN பொதியினை பயன்படுத்திவருகின்றதோடு, இந்த பொதியின் நீடிப்பொன்றாக அண்மையில் உலக சுகாதார அமைப்பினால் HEARTS பொதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொதிக்கு மாறும் போது உயர் இரத்த அழுத்தத்தினைக் கட்டுப்படுத்துவதற்காக பணிமுறைகளை பயன்படுத்துதல், தேவையான தொழிநுட்பங்களை விருத்தி செய்தல், சிகிச்சையளித்தலுக்கான விசேட விதிகளை தயாரித்தல், பதவியணியினரை பயிற்றுவித்தல், பயிற்சி கை நூல்களை தயாரித்தல், சுகாதார தகவல் முறைமைகளை இற்றைப்படுத்தல் அதேபோன்று வீடுகளில் உப்பு பாவனையை குறைப்பதற்கான அறிவூட்டல் வேலைத்திட்டம் மூலம் தேவையான அறிவினை வழங்குதல் போன்ற பல பணிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. இதற்குத் தேவையான நிதி ஆராய்ச்சி மானியமாக சர்வதேச அரசசார்பற்ற அமைப்பொன்றான Resolve to Save Lives என்னும் அமைப்பிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மானியத்தின் கீழ் உரிய ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு Vital Strategies என்னும் நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றினை செய்து கொள்ளல் வேண்டும். இதற்கிணங்க "இலங்கையில் ஆரம்ப சுகாதார சிகிச்சை சேவை வழங்கும் ஒருங்கிணைந்த பொறிமுறையில் உயர் இரத்த அழுத்த தடுப்பு மற்றும் முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான பன்முக மூலோபாயம்" என்னும் ஆராய்ச்சி கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக உரிய உடன்படிக்கையை செய்துகொள்ளும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.