• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இராஜதந்திர மற்றும் விசேட, சேவைகள் அத்துடன் உத்தியோகபூர்வ கடவுச் சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு விசா அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து பரஸ்பரம் விலக்களிப்பதற்காக இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் ஓமான் சுல்தான் அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- இலங்கை சனநாயக சோசலிச குடியரசினதும் ஓமான் சுல்தான் இராச்சியத் தினதும் பிரசைகளுக்கு உரிய மற்றைய நாட்டுக்கு பரஸ்பரம் செல்வதற்கான வசதிகளை வழங்கும் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவினை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இராஜதந்திர மற்றும் விசேட, சேவைகள் அத்துடன் உத்தியோகபூர்வ கடவுச் சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு விசா அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து பரஸ்பரம் விலக்களிப்பதற்காக இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் ஓமான் சுல்தான் அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.