• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Covax வசதியின் கீழ் இலங்கைக்கு COVID - 19 தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் பொருட்டு உடன்படிக்கையினைச் செய்து கொள்தல்
- COVID - 19 வைரஸ் தொடர்பில் பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டதன் பின்னர் குறித்த தடுப்பூசி நாடுகளுக்கிடையில் சமமாக பகிர்ந்தளிக்கப்படுவதனை உறுதிப்படுத்தும் பொருட்டு அரசாங்கங்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஒன்றிணைக்கும் உலகளாவிய அதிகாரபூர்வமான நடவடிக்கையானது Covax வசதியெனக் குறிப்பிடப்படுகின்றது. இதன்கீழ் COVID - 19 வைரஸ் தொடர்பில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கும் விருத்தி செய்வதற்கும் துரிதப்படுத்தப்பட்டதோடு உலகின் சகல நாடுகளுக்கும் இந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு சாதாரணமானதும் சமமானதுமான அதிகாரமுள்ளதென உள்ளதென உறுதி செய்கின்றது.

இலங்கை ஏற்கனவே இந்த Covax செயற்பாட்டில் சேர்ந்துள்ளதோடு, Covax வசதியின் மூலம் COVID - 19 தடுப்பூசி மருந்துகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டிலான உத்தியோகபூர்வ அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை தகைமையைப் பூர்த்தி செய்துள்ளதென உலக சுகாதார அமைப்பு அடங்கலாக GAVI அமைப்பினாலும் (Global Alliance for Vaccines and Immunization) உறுதி செய்யப்பட்டுள்ளது.

உரிய தடுப்பூசி வதியினைப் பெற்றுக் கொள்வதற்கு இரண்டு கட்டங்களின் கீழ் தடுப்பூசிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அந்தந்த நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, குறியிலக்காகக் கொள்ளப்பட்ட குழுக்கள் மற்றும் தடுப்பூசியினை களஞ்சியப்படுத்தும் ஆற்றல் என்பன தொடர்பிலான தொழினுட்ப தகவல்களை உள்ளடக்கிய தடுப்பூசி விண்ணப்பத்தின் முதலாவதும் A பகுதியுமானது 2020‑12‑07 ஆம் திகதியன்றுக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டியிருந்ததோடு, இலங்கை இந்த விண்ணப்பத்தினை உரிய காலத்தில் சமர்ப்பித்துள்ளது. இதன் இரண்டாவது பகுதியான தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் இதற்குரிய நட்டோத்தரவாத உடன்படிக்கையினைச் செய்து கொள்தல் என்பன பொருட்டு 2021 சனவரி மாதம் 08 ஆம் திகதியன்றுக்கு முன்னர் விண்ணப்பத்தினை முன்வைத்தல் வேண்டும். இதற்கிணங்க, சட்டமா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி Covax வசதிக்கான தடுப்பூசிக் கோரிக்கையின் B பகுதியினை சமர்ப்பிப்பதற்கும் Covax வசதி மூலம் தடுப்பூசி ஒதுக்கப்படும் சந்தர்ப்பத்தில் உரிய உற்பத்தியாளருடன் உடன்படிக்கையினைச் செய்து கொள்ளும் பொருட்டும் சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.