• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020/2021 பெரும்போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்ட
- சனவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து 2020/2021 பெரும்போகத்திற்கான நெல் அறுவடை ஆரம்பிக்கப்படவுள்ளமையினால், எதிர்பாரா விதத்தில் நெல்லின் விலை குறைவதனை தவிர்க்கும் நோக்கில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் உத்தரவாத விலைக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பின்வருமாறு 2020-2021 பெரும்போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 14 சதவீதம் ஈரத்தன்மை கொண்ட தரம்மிக்க நாட்டரிசி நெல் கிலோ ஒன்று 50/- ரூபாவாகவும் ஈரத்தன்மை 14 சதவீதம் - 22 சதவீதம் கொண்ட நெல் கிலோ ஒன்று 44/- ரூபாவாகவும் கொள்வனவு செய்தல்.

* 14 சதவீதம் ஈரத்தன்மை கொண்ட தரம்மிக்க சம்பா நெல் கிலோ ஒன்று 52/- ரூபாவாகவும் ஈரத்தன்மை 14 சதவீதம் - 22 சதவீதம் கொண்ட நெல் கிலோ ஒன்று 46/- ரூபாவாகவும் கொள்வனவு செய்தல்.

* உர மானியம் பெறும் சிறிய மற்றும் பாரிய நீர்ப்பாச விவசாயிகளிடமிருந்து பயிர் செய்யும் காணியின் அளவுக்கு ஏற்ப ஆகக்குறைந்தது ஹெக்டயார் 1 தொடக்ம் 1.5 வரை பயிர்செய்யும் விவசாயிகளிடமிருந்து 1,000 கிலோகிராம் வீதமும் ஹெக்டயார் 1.5 இற்கு மேல் 2 வரை பயிர் செய்யும் விவாசயிகளிடமிருந்து 1,500 கிலோகிராம் வீதமும் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்தல்.