• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020 தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களுக்கான (இரத்தினக்கல் அகழ்வதற்கான உரிமப்பத்திரம்) ஒழுங்குவிதியினை வௌிப்படுத்துதல்
- 1971 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசாங்க இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்தின் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் விதித்துரைக்கப்பட்டுள்ள அரசாங்க இரத்தினக்கல் கூட்டுத்தாபன துணை சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக இரத்தினக்கல் கைத்தொழிலுக்கான உரிமப்பத்திரம் பெற்றுக் கொள்ள முடியுமாவது தௌிவான மற்றும் தனிப்பட்ட சொத்துவம் அத்துடன் / அல்லது இறையிலி சொத்துவம் உள்ள காணிகளுக்கு மாத்திரமாகும். இதற்கிணங்க, இரத்தினக்கல் அகழ்வதற்கு ஏதேனும் காணியொன்றை குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்பவருக்கு இரத்தினக்கல் அகழ்வதற்கான உரிமைப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. ஆயினும், சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் சுமார் 20 சதவீதம் வரை பங்குடமை அல்லது குத்தகை உரிமையுடனான காணிகளுக்கென அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு உரிமப் பத்திரம் வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் 1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக 2020‑03‑02 ஆம் திகதியிடப்பட்டதும் 2165/1ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி மூலம் கைத்தொழில் அமைச்சரினால் வௌிப்படுத்தப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக முன்வைக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.