• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகாமையில் கைத்தொழில் பேட்டைகள் மற்றும் தென் மாகாண கைத்தொழில் அபிவிருத்தி என்பன பொருட்டு வசதிகளை வழங்கும் நிலையமொன்றைத் தாபித்த
- 1991 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் கைத்தொழில் பேட்டைகள் / விஞ்ஞான பூங்காக்களைத் தாபிப்பதற்கும் இதற்குத் தேவையான வசதிகளைச் செய்வதற்குமான வாய்ப்பு நிலவுகின்றது. அண்மையில் தென் மாகாணத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் சார்ந்த சில கைத்தொழில் வலயங்களைத் தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கைத்தொழில் பேட்டைகளில் முதலீடுகளைச் செய்வதற்கு அக்கறையுள்ள உள்நாட்டு, வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்குத் தேவையான அங்கீகாரங்கள் மற்றும் வசதிகளை ஒரே இடத்தில் வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் அம்பாந்தோட்டை துறைமுகம் சார்ந்த திறன் வழிமுறைகளுடனான நிலையமொன்றை உரிய சகல நிறுவனங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்டு தாபிப்பதற்கும் இந்த அலுவலகத்தின் பணிகளை கைத்தொழில் அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் தென் மாகாண பிராந்திய கைத்தொழில் நிலையத்தின் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கும் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.