• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்தை திருத்துதல்
- 1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் கடந்த 38 வருடங்களாக நாட்டின் ஊடகத் துறைக்கு விசேட சேவையினை ஆற்றி வருகின்றது. தற்போது செயற்படுத்தப்பட்டுள்ள கடும் ஊடக போட்டிக்கு முகங்கொடுத்து அதற்கேற்ற விதத்தில் செயலாற்றுவதற்கு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தீர்மானங்களை எடுக்கும் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ள கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையின் கட்டமைப்பினை மாற்றும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தற்போது ஏழு பேர்களைக் கொண்ட பணிப்பாளர் சபைக்கு திறைசேரி பிரதிநிதி ஒருவரையும் விடயத்துக்குப் பொறுப்பான வரிசை அமைச்சின் செயலாளர் அல்லது அவரினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் இந்த அமைச்சின் வேறு பிரதிநிதி ஒருவரையும் நியமிப்பதற்கு இயலுமாகும் வகையில் பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 09 பேர்களாக அதிகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் இந்த சட்டத்தை திருத்தும் பொருட்டு வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.