• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1973 ஆண்டின் 5 ஆம் இலக்க இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தை திருத்துதல்
- பத்திரிகை ஊடகங்களின் ஊடக அறிக்கைகள் மூலம் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதனை தடுத்தல் அதேபோன்று ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் நட்புறவினை உருவாக்கும் நோக்கில் 1973 ஆண்டின் 5 ஆம் இலக்க இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தின் மூலம் இலங்கை பத்திரிகை பேரவை தாபிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகள் பத்திரிகைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் பத்திரிகை பேரவையை கட்டமைப்பு ரீதியில் மறுசீரமைத்து மின்னணு, அச்சு மற்றும் புதிய ஊடகங்களை தழுவும் விதத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் நிறுவனமொன்றாகவும் ஊடக ஆய்வினை மேம்படுத்தும் நிறுவன மொன்றாகவும் மீளக் கட்டமைக்க வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தை திருத்துவதற்கு சிபாரிசுகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கும் இதற்கான கருத்துக்கள் மற்றும் பிரேரிப்புகளை பொதுமக்களிடமிருந்தும் சிவில் அமைப்புகளிடமிருந்தும் பெற்றுக் கொள்வதற்கும் இதற்கிணங்க, திருத்த சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்குமாக வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.