• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தினை தாபித்தல்
- 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' அரசாங்க கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அரசாங்க கொள்கையை, அதன் மூலம் அடைய எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தி திறமுறைகள் மற்றும் அவற்றின் உண்மையான முன்னேற்றம் என்பன பொதுமக்களுக்கு உரிய வகையில் சென்றடையவில்லையென்பது தெரியவந்துள்ளது. ஆதலால், அரசாங்கத்தின் கொள்கை மற்றும் அபிவிருத்தி முயற்சிகள் தொடர்பில் செம்மையான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் 'தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையம்' என்னும் பெயரில் அலகொன்றை தாபிக்கும் பொருட்டு வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.