• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020 மற்றும் அதற்கப்பால் பிரதான வௌிநாட்டுக் கொள்கை வழிகாட்டல்கள்
- 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனம் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள துறைசார் கொள்கைகள் உட்பட இலங்கையின் வௌிநாட்டு கொள்கைகளின் கீழ் நிலவும் செயற்பாடுகள் என்பவற்றை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 2020 மற்றும் அதற்கப்பால் பின்பற்றும் பொருட்டு 20 அம்சங்களைக் கொண்ட அடிப்படை வௌிநாட்டுக் கொள்கை வழிகாட்டலானது வௌிநாட்டு அமைச்சும் சனாதிபதி செயலகமும் இணைந்து தயாரித்துள்ளது. அரசாங்கத்தின் வௌிநாட்டுக் கொள்கை நோக்கானது உள்ளடக்கப்பட்ட இந்த ஆவணம் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றை வௌிநாட்டுக் கொள்கையுடன் இணைத்து இறைமையுடைய சமூகமொன்றாக சருவதேசத்தில் அதன் பங்கினை நிறைவேற்றுவதற்கு வழிகாட்டும். இதற்கிணங்க, இந்த அடிப்படை வௌிநாட்டுக் கொள்கை வழிகாட்டல்கள் வௌிநாட்டு அமைச்சுக்கும் பிராந்திய ஒத்துழைப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சுக்கும் வௌிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களுக்கும் வழிகாட்டும் கொள்கை ஆவணமொன்றாக பயன்படுத்தப்படுமென வெளிநாட்டு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.