• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'e-தக்சலாவ' என்பதை தேசிய உத்தியோகபூர்வ கற்றல் உள்ளடக்க முகாமைத்துவ முறைமையாக ஏற்றுக் கொள்ளல்
- COVID - 19 தொற்று நிலைமை காரணமாக பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி நடாத்திச் செல்வதற்காக கல்வி அமைச்சினால் இணையக்கட்டுப்பாட்டின் ஊடான நிகழ்ச்சித்திட்டமொன்றாக 'e-தக்சலாவ' நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தரம் 1 இலிருந்து தரம் 13 வரையிலான பாட விதானங்களுக்குரியதாக பாடப் புத்தகங்கள், பாட சிபாரிசுகள், கற்றல் உள்ளடக்கங்கள், வீடியோ பாடங்கள், வினாத்தாள்கள், பல்வகை வினாக்கள் போன்ற கற்றல் வளங்களை மாணவர்களுக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளது. இதற்கிணங்க, 'e-தக்சலாவ' இணையவழி நிகழ்சசித்திட்டத்தை இலங்கையில் பொதுக் கல்வி உள்ள பாடசாலைகள் மற்றும் கல்வி அமைச்சின் கீழுள்ள ஏனயை கல்வி நிறுவனங்கள் உத்தியோகபூர்வ கற்றல் உள்ளடக்க முறைமையாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.