• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்கு விதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- COVID - 19 தொற்று நிலைமை காரணமாக அந்நிய செலாவணி விகிதாசாரத்தின் மீது ஏற்பட்ட தாக்கத்தின் மத்தியில் பொருட்களை இறக்குமதி செய்வதனை முறைப்படுத்தும் பொருட்டு நியமிக்கப்பட்ட சுங்கத்தீர்வையினை நிர்ணயிக்கும் குழுவினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் உரிய ஒழுங்குவிதிகளை விதிப்பதற்காக வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் இரண்டையும் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளு மன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.