• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மிரிஸ்ச இலங்கை கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமைய கத்தில் உயர் பயிற்சி, நிருவாக செயற்பாடுகள் மற்றும் கரையோரப் பாதுகாப்பு படையினரின் தங்குமிட தேவைகளுக்காக கட்டடங்களை நிர்மாணித்தல்
- இலங்கை கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிகளை முறையாகவும் வினைத்திறனுடனும் நடாத்திச் செல்வதற்கான வசதிகளுடன் கூடிய நான்கு மாடிகளைக் கொண்ட உயர் பயிற்சி மற்றும் நிருவாக செயற்பாடுகளுக்கான கட்டடமொன்றினையும் கடமை மற்றும் பயிற்சி பணிகளில் ஈடுபடும் கரையோரப் பாதுகாப்பு படையினருக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு 5 மாடிகளைக் கொண்ட விடுதிக் கட்டடமொன்றினையும் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அதன் பின்னர் குறித்த காணியை இலங்கை சுற்றுலா அதிகாரசபைக்கு உடைமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டமையினால், இந்த நிர்மாணிப்பு பணிகளாவன இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆயினும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் குறித்த இந்த காணியில் எவ்வித அபிவிருத்தி பணிகளும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயற்பாட்டு மற்றும் நிருவாக நோக்கங்களுக்காக இந்த கட்டடத்தை துரிதமாக நிர்மாணிக்கவேண்டியுள்ளது. இதற்கிணங்க, இரண்டு கட்டடங்களையும் நிர்மாணிக்கும் பணிகளை துரிதமாக மீள ஆரம்பிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.