• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு ரத்மலான சர்வதேச விமான நிலையம் என்பவற்றின்பால் விமான கம்பனிகளை ஈர்த்தல்
- வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்களைத் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதன்கீழ் முன்னோடி கருத்திட்டமொன்றாக 2020 திசெம்பர் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து 2021 சனவரி மாதம் 19 ஆம் திகதிவரை சுகாதார அதிகாரிகளின் சிபாரிசுகளை பின்பற்றி வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்களைத் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் இலங்கை சிவில் விமானசேவைகள் அதிகாரசபை என்பவற்றினால் தயாரிக்கப்பட்டுள்ள விசேட நேர அட்டவணைக்கு அமைவாக சருவதேச விமானக் கம்பனிகள் செயற்பாட்டுப் பணிகளில் ஈடுபடவுள்ளன. தற்போது சருவதேச விமான பயணத்துறையானது முகங்கொடுத்துள்ள பிரச்சினைக்கு மத்தியில் சருவதேச விமானக் கம்பனிகள் இந்த நாட்டில் மேற்கொள்ளும் விமான பயணங்களை ஊக்குவிப்பதற்கு இந்த விமான கம்பனிகளிடமிருந்து அறவிடப்படவேண்டிய தரையிறக்கல் மற்றும் நிறுத்திவைத்தல் கட்டணங்களுக்கு 2020 திசெம்பர் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து 21 சனவரி மாதம் 19 ஆம் திகதிவரையிலான காலப்பகுதிக்குள் விலக்களிக்கும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.