• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021 ஆம் ஆண்டு சார்பில் முப்படையினருக்கும் தேவையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல்
- 2021 ஆண்டிற்குரியதாக முப்படையினருக்கும் தேவையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தேசிய ரீதியில் போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 2021 ஆம் ஆண்டு சார்பில் முப்படையினருக்கும் தேவையான உணவுப் பொருட்களை வழங்கும் ஒப்பந்தத்தை ஆகக்குறைந்த அனுசரணையான கேள்விதாரருக்கு கையளிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.