• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீதிக்கான மனை தொடர்பான கருத்திட்டம்
- இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கருத்திட்டத்தின் பணிகளை தொடங்குவதற்கு இயலுமாகும் வகையில் பின்வருமாறு நடவடிக்கை எடுப்பதற்கு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* கருத்திட்டத்தின் மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளித்தல்.

* கருத்திட்டத்தை நான்கு உபகருத்திட்டங்களாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் அதன் முதலாவது உபகருத்திட்டமாக நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதியினை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிலையியல் தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவின் விலைகளின் அடிப்படையிலான சிபாரிசுக்கு உட்பட்டு, மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளித்தல்.

* கருத்திட்டத்தின் மீதி மூன்று (03) உபகருத்திட்டங்கள் சார்பில் போட்டி கேள்வி நடவடிக்கைமுறையினை பின்பற்றி ஒப்பந்தத்தினை வழங்குதல்.