• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இருதரப்பு இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்து கொள்ளல்
- இளைஞர் அபிவிருத்தியினை குறியிலக்காகக் கொண்ட கொள்கைகளை தயாரிக்கும் போது பரஸ்பரம் பயனுள்ள மற்றும் நீண்டகால ஒத்துழைப்பினை மேம்படுத்தும் பொருட்டு இளைஞர் அபிவிருத்திக்கு உரியதாக பின்வரும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் பொருட்டு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் தஜிகிஸ்தான் குடியரசுக்கும் இடையில் இளைஞர் அபிவிருத்திக்கு ஏற்புடைத்தான புரிந்துணர்வு உடன்படிக்கை.

* இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ரஷ்ய கூட்டாட்சிக்கும் இடையில் இளைஞர் அபிவிருத்திக்கு ஏற்புடைத்தான புரிந்துணர்வு உடன்படிக்கை.