• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
- இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று 2017 ஆம் ஆண்டில் முற்றாக்கப்பட்டதோடு, 2018 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட இலங்கை - தென் ஆபிரிக்க பங்களிப்பு மாநாட்டின் ஆறாவது கூட்டத் தொடரில் இரு தரப்புகளுக்கும் இடையில் சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இரு தரப்பினர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.