• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யூரியா பசளை உற்பத்தி கருத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்குரியதாக சாத்தியத் தகவாய்வொன்றை மேற்கொள்தல்
- இலங்கையின் வருடாந்த யூரியா பசளை தேவை சுமார் 340,000 மெற்றிக்தொன்கள் ஆவதோடு, தற்போது இந்த மொத்த தொகையும் வௌிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டில் யூரிய பசளை இறக்குமதி செய்வதற்கு 26 பில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் யூரியா பசளை உற்பத்தி செய்வதன் மூலம் இதற்காக செலவாகும் அந்நிய செலாவணியை நாட்டில் சேமித்துக் கொள்ளும் சாத்தியம் நிலவுகின்றதோடு, கைத்தொழில் அமைச்சின் கீழ் செயற்படும் வரையறுக்கப்பட்ட பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பனி இதன் பொருட்டு கவனம் செலுத்தியுள்ளது. இதற்கிணங்க, கைத்தொழில் அமைச்சரினால் நாட்டில் யூரியா பசளை உற்பத்தி செய்வதற்கான சாத்தியத் தகவாய்வொன்றை மேற்கொள்வது சம்பந்தமாக முன்வைத்துள்ள பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த சாத்தியத்தகவாய்வினை SriLanka Institute of Nanotechnology (Pvt.) Ltd,. நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.