• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெங்குசார்ந்த கைத்தொழில் முறைமையை அபிவிருத்தி செய்து உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களை பாதுகாத்தலும் இலங்கை தேங்காய் எண்ணெய்க்கான வியாபார பெயரை பாதுகாத்தலு
- இலங்கையில் தெங்குசார்ந்த கைத்தொழில் சார்பில் கூடிய கவனம் செலுத்தும் போது அதன் உற்பத்தியினை 50 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்ள முடியுமென இந்த துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நுகர்வோர் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளின் போது நுகர்வின் பொருட்டு இறக்குமதி செய்யப்படும் தேய்காய் எண்ணையில் சுமார் 70 சதவீதம் தேங்காய் எண்ணெய் அல்லாத வேறு எண்ணெய் வகை உள்ளதென உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காயின் அளவு போதுமானதாக இல்லாமையினால் தற்போது தெங்கு மற்றும் அதுசார்ந்த 500 தொழிற்சாலைகள் அவற்றின் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பிரச்சினையான நிலைமைக்கு ஆளாகியுள்ளன. இலங்கையில் தேங்காய் எண்ணெய் மற்றும் தெங்குசார்ந்த உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வருமானமானது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019 ஆம் ஆண்டில் 16.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளமையினால், அரசாங்கத்தின் அணுசரணையின் கீழ் தெங்கு கைத்தொழிலின் புதிய போக்கினை உருவாக்கும் சாத்தியம் உள்ளதென தெரியவந்துள்ளது.

இதற்கிணங்க, தெங்குசார்ந்த கைத்தொழில் முறைமையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கைத்தொழில் அமைச்சரினாலும் பெருந்தோட்டத்துறை அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் கூட்டு பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்வதற்குப் பதிலாக உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மூன்று (03) மாத காலத்திற்குத் தேவையான துண்டாக்கப்பட்ட உலர்ந்த தேங்காய் உள்ளீடுகளை இறக்குமதி செய்தல். * கயறுடன் கூடிய துண்டாக்கப்பட்ட உலர்ந்த தேங்காய் உள்ளீடுகளை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமொன்றான பீ.சி.சி. நிறுவனத்தின் ஊடாக இறக்குமதி செய்தல்.

* நுகர்வோரின் உரிமை மற்றும் இலங்கை தேங்காய் எண்ணெய்க்கான வியாபார பெயரை முன்னிலைப்படுத்தி தேங்காய் எண்ணெயுடன் பாம் எண்ணெய் அல்லது வேறு எண்ணெய் வகைகளை கலந்து விற்பனை செய்வதை முழுமையாக தடைசெய்தல்.

* நாட்டில் பாம் எண்ணெய் பாவனையை ஊக்குவிக்காமல் தேங்காய் எண்ணெய் பாவனையை ஊக்குவிப்பது அரசாங்கத்தின் அடிப்படை கொள்கையொன்றென ஏற்றுக் கொள்தல் மற்றும் நுகர்வோரின் உரிமை உட்பட பொது சுகாதாரம் என்பவற்றின் மீது சுத்திகரிக்கப்பட்ட பாம் எண்ணெய் மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்தல். * தெங்கு கைத்தொழிலாளர்கள் பெற்றுள்ள கடன்களை மீள செலுத்துவதற்கு நிவாரணம் வழங்குதல்.

* தெங்குச் செய்கையை ஊக்குவிப்பதற்கு ஊடுபயிர் செய்கை, பால் பண்ணை மற்றும் நீர்வழங்கல் போன்ற தெங்குச் செய்கையின் விளைவு பெருக்கத்தை விருத்தி செய்யும் பொருட்டிலான நிவாரண பொதிகளை அறிமுகப்படுத்துதல்.

* இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் உரிய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சுகளுக்கிடையிலான செயலணியொன்றைத் தாபித்தல்.