• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் மற்றும் நீரகவளமூல சட்டத்தை திருத்துதல்
- 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் மற்றும் நீரகவளமூல சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது அதிகாரம்பெற்ற உத்தியோகத்தர்களுக்கு செய்யும் இடையூறுகளுக்கு தண்டனைகளை அதிகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் இந்த சட்டத்திற்கு திருத்தங்களைச் செய்வதற்காக 2016 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியன்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒழுங்குறுத்துவதற்கான பிரேரிப்புகளை உள்ளடக்கி இந்த சட்டத்தை திருத்துவதற்கு 2019 யூலை மாதம் 07 ஆம் திகதியன்றும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச திருத்தங்கள் சார்பில் சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு கடற்றொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.