• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக Wolbachia பக்றீரியாவைப் பயன்படுத்தி மேற்கொண்டு வரும் முன்னோடி கருத்திட்டம் சம்பந்தமான கூட்டு ஒப்பந்தத்தை இற்றைப்படுத்துதல்
- புதிய உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளின் மூலம் நுளம்புகளினால் பரவும் நோய்களான டெங்கு, சிக்கா, சிக்கன்குன்யா மற்றும் மஞ்சல் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து உலக மக்களை பாதுகாக்கும் நோக்கில் மொனாஸ் பல்கலைக்கழகத்தினால் 'உலக நுளம்பு நிகழ்ச்சித்திட்டம்' என்னும் சருவதேச ஆராய்ச்சி ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் டெங்கு நோயினைப் பரப்பும் 'ஈடிஸ்" நுளம்பினுள் வைரஸ் பெருகுதலைக் குறைத்து டெங்கு வைரஸ் பரவலை குறைப்பதற்காக Wolbachia பக்றீரியா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நுகேகொடை சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் பிரதேசங்களிலும் கொழும்பு நகர சபை பிரதேசத்தில் இனங்காணப்பட்ட பிரதேசங்கிளலும் இந்த பக்றீரியாவை பயன்படுத்துவதற்கு 2018 சனவரி மாதம் 09 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சுக்கும் மொனாஸ் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் உடன்படிக்கையொன்று செய்து கொள்ளப்பட்டுள்ளதோடு, இதன் செல்லுபடியாகும் காலம் ஏற்கனவே முடிவுற்றுள்ளமையினால் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மேற்பார்வை மற்றும் மதிப்பீட்டு பணிகள் 2021 ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் இந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையினைத் திருத்துவதற்காக சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.