• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திருத்தப்பட்ட தேசிய உளநல கொள்கை 2020-2030
- தேசிய உளநல கொள்கை மூலம் உளநல நோய்களை தடுத்தல், சிகிச்சையளித்தல், புனர்வாழ்வளித்தல் மற்றும் சமூகத்தில் உளநல சுகாதாரத்தினை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கான திறமுறை கட்டமைப்பானது செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த இலங்கை உளநல கொள்கையானது 2005 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதோடு, இது பத்து (10) வருடங்கள் நடைமுறையில் இருந்த போதிலும் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் இந்த திறமுறைகளின் முன்னேற்றத்தினை ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் என்பன இற்றைப்படுத்தப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தலைமைத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை பலப்படுத்துதல், பரந்துபட்ட உளநல சேவைகளை வழங்குதல், மனிதவள அபிவிருத்தி, சமூகத்தினைப் பலப்படுத்தல் ஆகிய பிரதான துறைகளின் கீழ் தேசிய உளநலக் கொள்கையானது தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இந்தக் கொள்கையானது 2020-2030 வரை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.