• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வேலைத்தளங்களில் தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பாதுகாப்பு உடைகளை (Overall Kit) வழங்குதல்
- உயர் சந்தை கேள்விகளுடனான துறைகளுக்கு முன்னுரிமையளித்து வருடாந்தம் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 100,000 இலிருந்து 200,000 ஆக அதிகரிப்பதன் மூலம் தொழிற்கல்வித் துறையை விரிவுபடுத்துவதற்கு 2021 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் கணிசமான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் கீழ் வேலைத்தளங்கள் மற்றும் நிர்மாணிப்பு சார்ந்த பயிற்சிகளை வழங்குவதற்கு 09 நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் கீழ் அண்ணளவாக 30,000 பேர்கள் பயிற்சி பெறுவதோடு, 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்புடன் இந்த அளவானது சுமார் 40,000 பேர்களாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பயிற்சிகளின் போது பயிற்சி பெறுபவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் மரபு ரீதியாக வேலை செய்பவரை விட நவீன தொழில் வல்லுநராக உரிய பயிற்சிகளில் ஈடுபடுவதற்கும் இயலுமாகும் வகையில் தொழிற்பயிற்சி பெறுபவர்களுக்கு பாதுகாப்பு உடைகளை (Overall Kit) வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2021 ஆம் ஆண்டு சனவரி மாதத்திலிருந்து தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு உள்வாங்கப்படும் வேலைத்தளங்கள் சார்ந்த பயிற்சிகளைப் பெறும் மாணவர்களுக்கு பாதுகாப்பு உடைகளை வழங்குவதற்கும் இந்த பாதுகாப்பு உடைகளை இலங்கை தரைப்படையின் 'Ranaviru Apparels' நிறுவனத்திற்கு கட்டளை வழங்கி உற்பத்தி செய்து கொள்வதற்குமாக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.