• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொலவெனிகம ரஜமஹ விகாரயை புண்ணிய பூமியாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரகடனப்படுத்தல்
- மாத்தறை கொட்டபொல பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கொலவெனிகம ரஜமஹ விகாரை 400 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த தாதுகோபுரம் மற்றும் பழைய அரசமர சுற்று பிரகாரம் என்பவற்றுடன் வரலாற்றுப் பெறுமதிமிக்க மேலும் பல காரணிகளைக் கொண்டுள்ளது. 1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க பௌத்த கோவிலுடைமைகள் கட்டளைச்சட்டத்தின் 4(11) ஆம் பிரிவின் கீழ் நிருவகிக்கப்படும் சுமார் 5 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த விகாரையில் கண்டறியப்படாத வரலாற்று பெறுமதிமிக்கவற்றை ஆராய்வது அத்தியாவசியமானதாகும். இதற்கிணங்க, தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தினால் இந்த ரஜமஹ விகாரயை பாதுகாப்பதற்கு இயலுமாகும் வகையில் அபிவிருத்தி திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு ஆரம்பித்துள்ளதெனவும் இதற்கிணங்க, நடவடிக்கை எடுப்பதற்காக 'கொலவெனிகம ரஜமஹ விகாரயை புண்ணியபூமி பிரதேசமாக' 1946 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க நகர, கிராம நிர்மாண கட்டளைச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரகடனப்படுத்து வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.