• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்துள்ள காணித் துண்டொன்றை அலுவலக கட்டடத் தொகுதியினைத் தாபிப்பதற்காக சப்பிரகமுவ மாகாண சபைக்கு குறித்தொதுக்குதல்
- இரத்தினபுரி புதிய நகர அபிவிருத்தி கருத்திட்டத்திற்காக 348 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டதும் இரத்தினபுரியில் அமைந்துள்ளதுமான 'Palm Garden' என்னும் காணியானது நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது. சப்பிரகமுவ மாகாண சபை அலுவலக கட்டடத் தொகுதிக்காக காணித் துண்டொன்றை வழங்குமாறு சப்பிரகமுவ மாகாண பிரதான செயலாளரினால் நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அரசாங்க பிரதான விலைமதிப்பீட்டாளரினால் நிர்ணயிக்கப்படும் மதிப்பீட்டு பெறுமதியினை செலுத்துவதற்கு உட்பட்டு, 'Palm Garden' காணியிலிருந்து ஏக்கர் 04 றூட் 02 விஸ்தீரணமுடைய காணித் துண்டினை 50 வருடகாலத்துக்கு குத்தகை அடிப்படையில் சப்பிரகமுவ மாகாண சபைக்கு குறித்தொதுக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.