• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வகவத்த நெய்யறி துணை நிலயத்தை நிர்மாணிப்பதற்காக இரண்டு 132 / 33kV, 45MVA மின்மாற்றிகளை விநியோகித்தல், வழங்குதல் மற்றும் பொருத்துதல், மேற்பார்வை செய்தல் போன்றவற்றுக்கான ஒப்பந்தத்தை கையளித்தல்
- வகவத்த நெய்யறி துணை நிலயத்தை நிர்மாணிப்பதற்காக இரண்டு 132 / 33kV, 45MVA மின்மாற்றிகளை விநியோகித்தல், வழங்குதல் மற்றும் பொருத்துதல், மேற்பார்வை செய்தல் போன்றவற்றுக்கான கேள்வியினை வழங்கும் பொருட்டு போட்டிகரமான கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்தை PT.CG Power Systems கம்பனிக்கு 245.62 மில்லியன் ரூபாவைக் கொண்ட (வற் இன்றி) தொகைக்கு கையளிக்கும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.