• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட கட்டடத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை கையளித்தல்
- விஞ்ஞான மற்றும் தொழினுட்ப மனிதவள அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, நிர்மாணித்து கையளிக்கும் அடிப்படையில் சருவதேச போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்த ஒப்பந்தத்தை M/s. Sanken Constructions Pvt. Ltd., நிறுவனத்திற்கு 3,624.96 மில்லியன் ரூபாவைக் கொண்ட (வற் இன்றி) தொகைக்கு கையளிக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.